Advertisment

தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்கிறோம்! திருமாவளவன்

t

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்து என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் இன்று மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: ‘’ராஜிவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுநர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை இன்று ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தாமதமின்றி ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரவை பரிந்துரை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் கருத்து கேட்கத் தேவையில்லை. குடியரசு தலைவரின் அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இதில் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161ன் படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கு இணையானது. அதை ஆளுநர் செயல்படுத்தினால் அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது.

Advertisment

கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக ஆளுநருக்குக் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு மேதகு ஆளுநர் அவர்களை வேண்டிக் கேட்டுகொள்கிறோம். ’’

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe