டிவிட்டரில் டிரெண்டான #கோ பேக் ஸ்டாலின், #வெல்கம் ஸ்டாலின்!

#கோ பேக் மோடி, #கோ பேக் அமித்ஷா வரிசையில், தற்போது #கோ பேக் ஸ்டாலின், # வெல்கம் ஸ்டாலின் என்ற ஹாஷ்டாக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகையின் போது, அவர்களுக்கு எதிராக #கோ பேக் மோடி, #கோ பேக் அமித்ஷா என்ற ஹாஷ்டாக்குகள் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டானது. இதற்கு திமுகவின் ஐடி டீமே காரணம் என பரவலாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது அதே போல் லண்டன் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி, பா.ஜ.கவினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#GoBackStalin என்ற ஹாஷ்டாக் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக #WelcomeStalin என்ற ஹாஷ்டாகை திமுகவினர் தேசிய டிரெண்டாக மாற்றி வருகின்றனர்.

go back stalin welcome stalin
இதையும் படியுங்கள்
Subscribe