Advertisment

மோடிக்கு வரவேற்பு... கண்ணில் சிக்காத அதிமுக கொடிகள்! (படங்கள்)

Advertisment

இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தற்பொழுது நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றுகொண்டிருக்கும் மோடியை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். அப்பொழுது காரில் இருந்து கதவை திறந்த மோடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக மகிழ்ச்சியுடன் கையசைத்தார். இன்று நேரு உள்விளையாட்டு அரங்கி நடைபெற இருக்கும் விழாவில் 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

முன்னதாக மோடியை சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை தமிழக ஆளுநர் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்க அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் செல்லும் வழி நெடுக பாஜகவினர் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மறுபுறம் முதல்வர் வருகையை முன்னிட்டு திமுகவினரும் கட்சிக் கொடிகளுடன் காத்திருந்தனர். ஆனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக சார்பில் கட்சிக்கொடிகளையோ, வரவேற்பையோ காணமுடியவில்லை.

admk modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe