Advertisment

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு நேற்று வருகை தந்தார். இன்று காலை 7 மணிக்கு குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் வந்த அவருக்கு அறநிலையத் துறை சார்பாககோபுர நுழைவாயிலில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், நந்து, தீபக், ஹரிஷ் பட்டர்கள் வேதமந்திரம் முழங்க வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் ராமானுஜர் சன்னதி, நம்பெருமாள் மூலஸ்தானம், தாயார் சன்னதி, அர்ச்சுன மண்டபத்தில் உள்ள நம் பெருமாளைவேண்டி சாமி தரிசனம் செய்தார்.