Welcome to Deputy Chief Minister Udhayanidhi in Dindigul

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலத்தின் இல்ல திருமண விழாவிற்கு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அவரை திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூர் அருகே உள்ள அரவக்குறிச்சி செக் போஸ்ட் அருகே மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மலர் கொத்து கொடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.

Welcome to Deputy Chief Minister Udhayanidhi in Dindigul

இதைத் தொடர்ந்து அய்யர் மடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர். இந்த திருமண விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் வருவதைக் கண்டு திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், இளைஞரணியினர் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகத் திரண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

Advertisment

Welcome to Deputy Chief Minister Udhayanidhi in Dindigul

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று முதன் முதலில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைதந்ததால் திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் வரை சாலையின் இருபுறமும் கொடி தோரணங்களும், விளக்குகளும் போட்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் விடுதியில் நேற்று இரவு தங்கினார். அதன்பின் மாவட்ட அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி உள்பட மாவட்டச் செயலாளரான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் இன்று காலை 9.20க்கு தனியார் விடுதியில் இருந்து நத்தம் புறப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் மக்கள் பெருந்திரளாக திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலத்தின் மகனான ஆண்டிச்சாமிக்கும், ராதாதேவிக்கும் திருமணத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதில் கட்சிப் பொறுப்பாளர்களுடன் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.