Skip to main content

களை கட்டிய ஆட்டுச் சந்தை... மகிழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Weekend goat market, Farmers and villagers happy

 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல், பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான கரிநாள் என்று சொல்லப்படும் காணும்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடும் திருநாளாக மக்கள் கொண்டாடுகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் கிராமம். இந்த கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை நடைபெறும்.

 

இந்த சந்தைக்கு சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாயக் தொழிலாளர்கள் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு பண்டிகை கொண்டாட தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அதன்படி நேற்று அத்தியூர் ஆட்டுச் சந்தை களைகட்டியது. ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள்  பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். ஒரு ஆடு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. இதேபோன்று  நேற்று மட்டும் பத்தாயிரம் ஆடுகள் சுமார் 10 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளன.

 

ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் இது பெருத்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 கோடி. ஒரே நாள் சந்தையில் இவ்வளவு பணம் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.