நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்துகொண்டார். இதில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டனர்.

Advertisment

big boss

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் மீரா மிதுன், சேரன், சரவணன், அபிராமி, சாக்ஷி, ஆகியோர் உள்ளனர். இதில் சாக்‌ஷி அல்லது சேரன் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மீரா மிதுனுக்கு குறைவான வாக்குகளே இந்த வாரம் கிடைத்துள்ளது. எனவே, மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.