/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/food0000.jpg)
சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா களைகட்டியுள்ளது. விடுமுறை என்பதாலும், இன்றே இறுதிநாள் என்பதாலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா தொடங்கியது. 200- க்கும் மேற்பட்ட அரங்குகளில் உணவுகள் வழங்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று ஏராளமானோர் குவிந்துள்ளனர். அரங்குகளில் பாரம்பரிய உணவுகள் உள்பட பலவகை உணவுகள் இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ருசித்து உணவருந்துகின்றனர்.
இந்த உணவுத் திருவிழாவில், கிராமத்து உணவுகளுக்கும், பிரியாணி வகைகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)