Advertisment

கச்சேரியுடன் களைகட்டிய பிரேம்ஜி திருமணம்; பாட்டுப்பாடி அசத்திய மணமக்கள்

nn

முருகப்பெருமானின் ஐந்துபடைவீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் -9) காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாகநேற்றுமாலை திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Advertisment

விழாவில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகள் பிரேம்ஜியின் சகோதரர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் இன்னிசை கச்சேரியில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இணைந்து சினிமா பாடல் பாடி அசத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Advertisment
thiruthani marriage premji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe