மீண்டும் களைகட்டிய மாட்டுச் சந்தை!

ஈரோட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தினத்தன்று நடைபெறும் மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாடு வளர்க்கும் விவசாயிகள், இந்த சந்தைக்கு தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

அதேபோல் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை விலைபேசி வாங்கிச் செல்வது வழக்கம்.

Weed cow market again in erode district

இந்த நிலையில் சமீப காலமாக மாட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது. அதற்கு காரணம் கடந்த இரண்டு மாதமாக பெரும் விவாதப் பொருளாகவும் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இது கால்நடைகளையும் விட்டுவைக்காது என்ற அச்சமும் இருந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போது நிலைமை சீராகி இன்று (12/03/2020) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளைத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு பல ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த மாடுகளை வெளி மாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் மாட்டு வியாபாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது என்றே கூறலாம்.

cow markets Erode peoples
இதையும் படியுங்கள்
Subscribe