ADVERTISEMENT

'டல்' ஆன ஈரோடு மாட்டுச் சந்தை!

06:59 PM Feb 04, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கருங்கல்பாளையத்தில், வியாழக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்கு ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இருந்தும் மாடுகள் வரத்தாகும். இந்த மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

4 ஆம் தேதி கூடிய மாட்டுச் சந்தையில் சென்ற வாரத்தைப் போலவே பசுக்கள் 500, எருமை 250, கன்று 100 என மொத்தம் 850 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதில், பசு மாடு ரூபாய் 30ஆயிரம் முதல் ரூபாய் 70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூபாய் 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையும், கன்று 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இதனால், சந்தையில் 70 சதவீதம் அளவே மாடுகள் விற்பனையானதால், மாட்டு வியாபாரிகள் கவலையடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT