Advertisment

குவாட்டர் இலவசம் என பேனர்... தராததால் திருமணத்திற்கு வந்தவர்கள் செய்த வேலையால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக். இவர் சென்னையில் ஜே.சி.பி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரசு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Advertisment

வரவேற்பையொட்டி திருமண மண்டபத்தின் வாசலில் கார்த்திக்கின் நண்பர்களால் வைக்கப்பட்டிருந்த பேனரில் எழுதப்பட்டிருந்த வாசகம் குறித்து தற்போது முகநூலில் பரவி வருகிறது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில், அனுமதி இலவசம்,திருமணமானவர்களுக்கு ஒரு குவாட்டர் + சைடிஸ், திருமணமாகாதவர்களுக்கு இரண்டு குவாட்டர் + சைடிஸ், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசம் என பேனரில் அச்சிடப்பட்ட வாசகம்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நெடி கிராமம் முழுவதும் திருமண வரவேற்பையொட்டி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் நெடி கிராமத்தில் பரபரப்பு... வாலிபர் கைது...கைது செய்யப்பட்ட நாள்...கைது செய்யப்பட்ட இடம்...கைதானவர்மணமகன் கார்த்திக்.... கைது செய்யப்பட்டவர்மணமகள் சரசு...குற்றம்பெண்ணின் மனதை திருடி விட்டார்... தீர்ப்புமூன்று முடிச்சு போடுதல்...முக்கிய சாட்சி கார்த்திக், தயா குண்டன் குரூப்ஸ், நெடி என அதில் அச்சிடப்பட்டிருந்தன.

இந்த திருமணம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனரில் உள்ள வாசகத்தின்படி திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு குவாட்டரும் சைடிஷ் ஆகியவை தரவில்லையாம். இதனால் திருமணத்திற்கு வந்த யாரோ ஒருவர் படம் எடுத்து, வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து இப்போது பலரும் அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதை கேள்விப்பட்ட இது திருமண வீட்டவர்களும் போலீஸ் வழக்கு, விசாரணை என வருமோ என்ற குழப்பத்தில் உள்ளனர்.

friends villupuram Tindivanam Wedding Free
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe