திண்டுக்கல் திருச்சி ரோடு காந்திஜி நகரில் முக்குலத்து தேவர் சமுதாய நலச்சங்கத்தின் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இதில் கௌரவத் தலைவர் ராமுத்தேவர், மாவட்ட முக்குலத்தோர் சமுதாய நல சங்கத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கௌரவ ஆலோசகர் எஸ்.பி.எம்.கல்லூரி சேர்மன் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மீனாட்சி வரவேற்புரை ஆற்றினார். இதில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன்,டாக்டர் ஜெயவனிதாமணி ஆகியோர் தொகுப்புரை ஆற்றினர். இதில் துணைத் தலைவர் பாஸ்கரன், துணை செயலாளர் காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முக்குலத்தோர் சங்கத்தின் கௌரவத் தலைவரான ராமுத்தேவர் பேசும்போது, “திண்டுக்கல் மாநகரில் கூடிய விரைவில் நமது சமூகம் சார்பில் இடம் வாங்கி ஒரு மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும். அதற்கு நமது சமூகத்தினர் ஆதரவு கொடுக்க வேண்டும். அதன்மூலம் தான் மிகப்பெரிய அளவில் திருமண மண்டபம் கட்ட இருக்கிறோம். அது தற்போது புதிதாக திறந்து வைத்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் நமது சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஜாதகம் பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் நமது சமூகத்தைச் சேர்ந்த ஆண் பெண் இருபாலர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமண பதிவை பதிவு செய்து அதன்மூலம் வரன் தேடி கொள்ளலாம். மேலும் நமது சமூகத்தினர் வேலைவாய்ப்பு மற்றும் படிப்பு உள்பட அனைத்து தேவைகளுக்கும் மாவட்ட தலைமை அலுவலகத்தை நாடுவதின் மூலம் பயனடைந்து கொள்ளலாம். இப்பொழுது போலவே தொடர்ந்து நமது முக்குலத்தோர் தேவர் சமுதாய வளர்ச்சிக்கு நமது மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த விழாவில் ஆலோசகர்களான அன்பு கிறிஸ்டியான், பிச்சை, ஜெயகணேஷ், வெள்ளைப்பாண்டியன், செய்தி தொடர்பாளர்களானநக்கீரன்சக்திவேல், தினத்தந்தி பாலமுருகன், பொதிகை நிருபர் ராஜசேகர், குமரேசன் மற்றும் ஜெயராமன், மணிகண்டன், பரமன், வீரணன், வழக்கறிஞர்கள் ராஜாங்கம் கார்த்திகேயன், முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தேவர், ராஜசேகரன், பொன் இளங்கோவன், கணேசன், மாநகர மண்டல பொறுப்பாளர்கள் கண்ணன், ராஜன், தங்கபாண்டியன், நிர்வாகிகள் ஜெயக்குமார், கருணாமூர்த்தி, மாரி மகேந்திரன், சதானந்தம், சக்திவேல், உமாதேவி, பிரேமா, மஞ்சுளா, டாக்டர் நித்ய கல்யாணி,டாக்டர் சங்கீதா, கயல்விழி, கோமதி, மாலதி, மலர்விழி, காஞ்சனா மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட சமூக மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.