kanyakumari

குமரி மாவட்டம் மைலாடி ஓசரவிளையைச் சோ்ந்த மலர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அஞ்சுகிராமம் போலிசில் கொடுத்த புகாரில் கணவனை பிரிந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகள் பி.எஸ்.சி. நா்சிங் முடித்த நிலையில் குவைத்தில் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் மகளை காதலித்து வந்த அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த மா்பின் தனேஷ் (26), அவளுடன் நெருக்கமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதோடு அந்தப் புகைப்படங்களை காட்டி 5 லட்சம் ருபாய் கேட்டு மிரட்டி வருகிறார் எனக் கூறியிருக்கிறார்.

Advertisment

இதையடுத்து மா்பின் தனேஷை போலிசார் கைது செய்தனா். பின்னா் அவனிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம், நாகா்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் வேலை பார்க்கும்போது முகநூல் வழியாக இருவருக்கும் தொடா்பு ஏற்பட்டு பின்னா் நண்பா்களாகப் பழகினோம். அதன் பிறகு இருவரும் தூரத்து உறவு முறை என தெரிய வந்ததால் காதலர்களாக நெருங்கி பழகினோம். இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தோம்.

இதற்கிடையில் குவைத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு வேலை கிடைத்ததால் 2019 ஜீன் மாதம் நானே அவளை அங்கு அனுப்பி வைத்தேன். அங்குச்சென்ற பிறகும் என்னிடம் தினமும் பேசினாள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது இருவரும் திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தியிருந்தோம்.

Advertisment

இந்த நிலையில் அவளுக்கும் அருமனையைச் சோ்ந்த ஓருவருக்கும் முழுச்சம்மதத்துடன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதாக அறிந்தேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நானும் அவளும் சோ்ந்து இருந்த புகைப்படத்தை அந்தப் பெண்ணின் முகநூலுக்கு அனுப்பி எச்சரித்தேன். அதை அவள் பொருட்படுத்தவே இல்லை. இதனால் அவளுடைய தயாரின் செல்போனுக்கும் படங்களை அனுப்பினேன் என்றார்.

http://onelink.to/nknapp

போலீசார் மா்பின் தினேஷின் செல்போனை பறிமுதல் செய்து அவன் வேறு யாருக்காவது புகைப்படங்களை அனுப்பியிருக்கிறானா என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.