A web of love for a schoolboy; Kidnapped teacher arrested

பள்ளி மாணவனை காதலித்து கடத்திச் சென்ற ஆசிரியையை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மேடவாக்கம் அருகே பதினோராம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் ஒருவனிடம் பேசி பழகி வந்த ஆங்கில ஆசிரியை ஹெப்சிபா (28) சிறுவனை காதல் வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவன் திடீரென காணாமல் போன நிலையில் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 11-ம் வகுப்பு சிறுவனை ஆசிரியர் ஹெப்சிபா, கோவை காரைமடை பகுதிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்துள்ளனர். போலீசார் விசாரணையில் தனியார் பள்ளி ஆசிரியரான ஹெப்சிபா திருமணமாகி விவாகரத்து ஆனவர் என தெரிய வந்துள்ளது.