மூன்று நாட்களுக்கு மழை!! மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 Rain for three days !! Weather Observation Center for Fish Warning

நவம்பர் 19, 20, 21 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியானதுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால், நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல்தெற்கு கடல் மத்திய பகுதியில் நவம்பர் 18ஆம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Train weather
இதையும் படியுங்கள்
Subscribe