தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலசுழற்சியால் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அடுத்த மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என்றும்சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.