Advertisment

தமிழிசையை தரக்குறைவாக பேசிய வாலிபருக்கு சரமாரி அடி, உதை!

bjp

Advertisment

தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக பேசி, அவரை தாக்க முற்பட்டவாலிபரை பாஜகவினர் சரமாரி அடித்து உதைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயிலில், பாஜக சார்பில் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

b1

Advertisment

தமிழிசை பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் மதுபோதையில் இருந்த வாலிபர் தமிழிசையை தரக்குறைவாக பேசியவாறு மேடையை நோக்கி சென்றார். அவர் தமிழிசையை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பாஜகவினர் வாலிபரை அடித்து, உதைத்தனர். ’அடிக்க வேண்டாம்’ என்று தமிழிசை தொடர்ந்து வலியுறுத்தியும், தொண்டர்கள் விடுவில்லை. வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், அந்த வாலிபரை போலீசார் மீட்டு அழைத்து சென்றனர்.

tamizhisai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe