மாஸ்க் கட்டாயம்... அதுவும் குறிப்பாக இந்த மாவட்டங்கள்... - தலைமைச் செயலர் சண்முகம் கடிதம்!

corona

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், மாஸ்க் அணிவதைகட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

கரோனாபாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அந்தக்கடிதத்தில், சமீப காலமாகமாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல்போன்றவை கடைப்பிடிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல்பங்கேற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.பருவ மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். கரோனாதொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கையை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகசென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,சேலம் மாவட்டத்தில் சிறப்புக் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

corona virus TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe