தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதையும் தாண்டி தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக முதல்வர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக மக்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்,தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். நோய்த் தொற்று பரவ காரணமாக இருந்துவிடாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"தமிழக மக்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்..." முதல்வர் உருக்கமான வேண்டுகோள்!
Advertisment
Advertisment
Follow Us