'Weapon worship to the pit'-an attention grabber

Advertisment

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.

முன்னதாக சென்னைக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர் கனமழை காரணமாக இன்றே ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பல்லாவரம்-குன்றத்தூர் இடையே உள்ள சாலையில் உள்ள பள்ளத்தை நெடுஞ்சாலை துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்காகஅந்த பகுதி மக்கள் பள்ளத்தின் மீது கல் ஊன்றி வைத்து அதற்கு மாலை அணிவித்து, வாழை மரக்கன்று நட்டு நூதன முறையில் தங்களுடைய போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.