ரகத

Advertisment

அதிமுக கூட்டணியில் நேற்றுவரை இருந்துவந்த தேமுதிக, இன்று காலை அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக தரப்பில் தரவில்லை என்று தேமுதிக விலகலுக்குக் காரணம்தெரிவித்திருந்தது.

Advertisment

இதனிடையே, தேமுதிக எந்த அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் துணைத் தலைவரான பொன்ராஜ் எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நடிகர் கமல், "எங்கள் அணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம், தேமுதிகவை எங்கள் கூட்டணிக்கு பொன்ராஜ் அழைத்து பற்றி எனக்குத் தெரியாது" என்றார்.