'' We will stop the train if no action is taken '' - Rameswaram fishermen resolution!

நேற்று (19.12.2021) ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அன்று மாலையே மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்த, ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில்,மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இன்றுமுதல் (நேற்று) காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் போவதாகவும், நாளை (இன்று) ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும்மீனவர் சங்கங்கள் அறிவித்தன.

Advertisment

'' We will stop the train if no action is taken '' - Rameswaram fishermen resolution!

Advertisment

அதன்படி கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில் அரசு பேருந்து நிலையம் முன்புஇன்று காலைமுதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், 8 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்று மாலையே ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தீர்மானமாக, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி மாலை 4.30 மணியளவில் தங்கச்சிமடத்திலிருந்து சென்னை செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.