Advertisment

'இவர்களையும் அரசின் கண்ணுக்கு காட்டுவோம்'-வைரமுத்து கருத்து! 

 'We will show them to the eyes of the government' - Vairamuthu comment!

கடந்த 25.10.2021 அன்று டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில்திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப்பால்கேவிருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Advertisment

உயரிய விருதான தாதாசாகேப்பால்கேவிருது பெற்றதற்கு பல்வேறு கலைஞர்கள், பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து விருதுபெற்றநடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில்...

Advertisment

 'We will show them to the eyes of the government' - Vairamuthu comment!

'பால்கே விருது பெற்றதில்

கலை உலகுக்கே

பெருமை சேர்த்துள்ளார்

நண்பர் ரஜினிகாந்த்.

ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று

பால்கே விருதுக்குத்

தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்

மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்

ஒன்றிய அரசின்

கண்களுக்குக் காட்டுவோம்'

என்று நெகிழ்ச்சியாகத்தெரிவித்துள்ளார்.

Bharatiraja Ilaiyaraaja kamalhaasan Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe