Advertisment

தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும்; நீங்களா நாங்களா பார்ப்போம்- ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதில்!!

kk

Advertisment

இன்று விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடி சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட பிரதமர் எனவேதான் கலைஞர் சிலை திறப்பு விழாவில் அவரை சாடிஸ்ட் பிரதமர் என்று கூறினேன். புயலால் பாதித்த தமிழகமக்களுக்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத பிரதமரை சாடிஸ்ட் பிரதமர் என்று சொல்வதில் என்ன தவறு. எனவே தற்போது உறுதியாக அதே நிலையில் இருக்கிறேன். பிரதமர் மோடிசாடிஸ்ட் பிரதமர் என கூறியிருந்தார். ஸ்டாலினுக்குபதிலளிக்கும் வகையில்சென்னை அமைந்தகரையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்,

மதுரையில் மீனாட்சி அம்மன் பெயர் புகழ் எப்படி இருக்கிறதோ அதேபோல் மதுரையில் சாமானியர்களுக்கு சேவை செய்ய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஓங்கி நிற்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மோடி அவர்கள் புயலுக்கு தமிழக மக்களுக்கு எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்று தொடர்ச்சியாக பொய் பேசி வருகிறார். எனது ட்விட்டர் பக்கத்தில் நான் சொல்லியிருந்தேன் ''உயிரிழந்த தமிழக மக்களின் குடும்பத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்'' என்று தெளிவாக மோடி பதிவிட்டு இருக்கிறார். முதலமைச்சரிடம் என்னென்ன உதவிகள்தேவையோ அதை செய்கிறேன் என உறுதியளித்துஇருக்கிறேன் என சொன்னதையும் மறைத்து... மறைத்து... ஒரு பொய்யை ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னொன்றையும் அவர் சொல்கிறார். தமிழகத்தில் ஏதோ பாஜகவை ஒழித்துவிட்டேன் என கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும் நீங்களா நாங்களா என்று பார்க்கத்தான் போகிறோம். எங்களை ஏதோ ஒழித்து விடலாம் என எண்ணாதீர்கள். உங்களால் தமிழகத்திலேயே யாரையும் எதிர்கொள்ள முடியாது. இதில் அகில இந்திய அளவில் எப்படி எதிர்கொள்வீர்கள். அகில இந்திய கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் ஸ்டாலின் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததை ஏற்றுக் கொள்ளாமல் எல்லோரும் பின்வாங்கி விட்டார்கள். இவர் முன்மொழிய முன்மொழியஎல்லோரும் பின்வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழகத்தில் பாஜகவை இவர் ஒன்றும் ஒடுக்கவும்முடியாது அடக்கவும் முடியாது.

Advertisment

ஏற்கனவே பாஜக போனபாராளுமன்ற தேர்தலில் 19.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் கூட்டணியா அல்லது நாங்களாஎன்று பார்த்து விடுவோம். எனவே சும்மா பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. சாடிஸ்ட் பிரதமர் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட சோனியா காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு பிரதமரை சாடிஸ்ட் பிரதமர் என சொல்கிறார் எனவே அவர் இனி சாடிஸ்ட் ஸ்டாலின் எனக்கூறினார்.

stalin Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe