KP.Anbalagan

தவறு யார் செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவர் பாரபட்சம் பார்க்கமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கியது தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக திண்டிவனம் அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் ஈரோடு அருகே உள்ள அரச்சலூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முதல் கட்ட விசாரணையில் குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு நடத்தி அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். தவறு யார் செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவர் பாரபட்சம் பார்க்கமாட்டோம். இவ்வாறு கூறினார்.