சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தைதொடர்ந்து தமிழகத்தில் பல்வேறுஅரசியல்தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் இனி வரவேற்பு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்சாலையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக இனி பிளக்ஸ் பேனர் வைக்கமாட்டோம் என்று உறுதி மொழியோடுமதுரை எங்கும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
இனி பிளக்ஸ் பேனர் வைக்கமாட்டோம்; உறுதிமொழி எடுத்த அஜித் ரசிகர்கள்...!
Advertisment