Advertisment

’’தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்’’- எனப்பேசிய பாரதிராஜா மீது வழக்குப்பதிவு

br

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜ்நாராயணன் அளித்த புகாரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் குறித்து சில கருத்துகளை அவர் வெளியிட்டார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார் பாராதிராஜா. இதையடுத்து சென்னை வடபழனி காவல்நிலையத்தில் நாராயணன் அளித்த புகாரில், “விநாயகரை இறக்குமதி செய்த கடவுள் என்றும், ஆண்டாளை மிக மோசமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், ‘நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று பாரதிராஜா கூறியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

narayanan Vairamuthu Bharatiraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe