ADVERTISEMENT

நாளை முதல் பிரேத பரிசோதனை செய்யமாட்டோம்- மருத்துவர்கள் முடிவு!

01:42 PM Oct 31, 2019 | kalaimohan

7 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இவ்வளவு பேர் போராட்டத்தில் இருந்தும் நாங்கள் 50 பேருக்குத்தான் பணிமாறுதல் கொடுத்திருக்கிறோம். அந்த இடத்தில் புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல மக்களுக்கு சிகிச்சை தடைபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியவர்களுக்கு நன்றி என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் ரஜீவகாந்தி மருத்துவமனையில் நோயாளிகள் செல்லக்கூடிய பாதையான படிக்கட்டை அடைத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அதை தவிர்க்கலாமே அதை விடுத்து அந்த வாயிலை அடைத்து மருத்துவர்கள் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பேன் என்பது ஏற்புடையது தானா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் திருச்சி மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்யமாட்டோம் என திருச்சியில் மருத்துவ கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்று முதல்வருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT