Advertisment

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு தண்ணீர் தரமாட்டோம்!  விவசாயிகள் எதிர்ப்பு!!

muthaiya

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் வரத்து வரக்கூடிய லோயர் கேம்பில் இருந்து 1295 கோடி மதிப்பீட்டில் 56 கிலோ மீட்டருக்கு குழாய் பதித்து தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கம்பம் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பனைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கோடைக்காலங்களில் பெரியார் அணையில் இருந்து குறைந்த அளவில் திறந்து விடப்படும் தண்ணீர் கம்பம் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பனைக்கு வந்து சேராது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலத்தடிநீர் குறையும் அதன் மூலம் விவசாயிகளின் விலை நிலங்களூம் பாதிக்கும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.

Advertisment

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதிவிவசாயிகளும் கூட குழாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டத்தில் விவசாயம் குறைவதுடன் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பூமியும் பாலைவனமாக மாறிவிடும். அதனால் மதுரைக்கு தண்ணீர் தரமாட்டோம் என விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் முதல்வர் எடப்பாடி அறிவித்தபடி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான கட்டுமான பணிகளுக்காக பூமி பூசை நடத்துவதற்காக பொதுப்பணித்துரை செயற் பொறியாளர் அன்பு செல்வன், உதவி பொறியாளர் கதிரேஷ் குமார் உள்பட சில அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்ட் காரர்களுடன் பொருட்களை எடுத்து கொண்டு பூமிபூஜை நடத்த லோயர் கேம் வந்தனர். இந்த விஷயம் விவசாய சங்க நிர்வாகிகள் காதுக்கு எட்டியதின் பேரில் செங்குட்டுவன், செந்தில் குமார், ராஜீ உள்பட 50க்கு மேற்பட்டோர் அந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பூமி பூஜை நடத்தகூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகளும் பூமி பூஜை நடத்தாமலேயே திரும்பி சென்று விட்டனர்.

mullai periyatu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe