Advertisment

'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை!  

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

Advertisment

கடந்த2017 ஆம்ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார்3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னைவந்தடையும் வகையில்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சிலநாட்களிலேயேசேலம் பகுதியில்விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.விவசாயிகளின் எதிர்ப்பைமீறி பலரின்நிலங்களைச் சாலைக்காககையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும்,8 வழிச்சாலைதிட்டம் என்ற பெயரில்மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டுகனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல்செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை8 வழிச்சாலைதிட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும்கூட்டத்திற்காகமத்திய சாலைமற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,நேற்று (16.02.2021) சென்னை வந்தார்.இதுதொடர்பாகநேற்று மாலை சென்னைலீலா பேலஸ் ஹோட்டலில்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார்.'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள்'உயிரே போனாலும்ஒரு பிடி மண்ணைக்கூடதர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள்,இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான்இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதேசாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும்முயற்சி' என்றனர்.

Nitin Gadkari edappadi pazhaniswamy 8 ways road salem to chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe