Skip to main content

'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை!  

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை வந்தடையும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் பகுதியில் விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின்  எதிர்ப்பை மீறி பலரின் நிலங்களைச் சாலைக்காக கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (16.02.2021) சென்னை வந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார். 'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள் 'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள், இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான் இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே சாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும் முயற்சி' என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.