ADVERTISEMENT

'கட்டாயப்படுத்தமாட்டோம்; விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி'- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

06:28 PM Jan 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஜனவரி 16- ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில், புனேவில் இருந்து 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பாட்னா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், புனேவிலிருந்து விமானத்தில் 5.36 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 20,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து, இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து பின்னர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட து.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஜனவரி 16- ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படும். விருமப்பமில்லாதவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தமாட்டோம். கரோனா தடுப்பு மருந்துகளுடன் 14 மணிநேரம் தொடர்ந்து பயணிக்கும் வகையில் வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT