Advertisment

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மாட்டோம்! உச்சநீதிமன்றத்தில் கேரள வாக்குறுதி!!


முல்லை பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணையை தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் கட்ட மாட்டோம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளது.
Advertisment
தேனிமாவட்டத்திலுள்ள தமிழக-கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் குமுளி தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது கர்னல் பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை. இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. இப்படி புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
Advertisment
dam
அந்த மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014 தீர்ப்பு அளித்தது. இந்த அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கூடாது என அந்த தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது ஆனால் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு புதிய அணையை கட்டுவதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இது 2014 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி இருந்தது. அதனால் கேரளா மற்றும் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடு வேண்டும் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர்களான ஏ.கே.சிக்ரி,அப்துல் நசீர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
அதுபோல் கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்ட வாதிட்டபோது, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கவில்லை புதிய அணை கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி பெறாமல் முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட மாட்டோம் என்று வாதிட்டார்.இதையடுத்து இந்த வாதத்தை பதிவு செய்த உச்சநீதிமன்ற அமர்வு தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக தீர்ப்பளித்துள்ளது.
tngovt Tamilnadu Kerala mullai periyaru dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe