சென்னையில் நடைபெற்ற 'கமல் 60' நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன் மேடையில் அவர் பேசும்பொழுது ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி. அதேநேரத்தில்இருவரும் அரசியலில்சாதிப்பதும் உறுதி.ஆனால் அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை, அராஜகம் அற்ற ஆட்சியை தருவார்கள்.அவர்களுக்கு பிறகு அரசியலில் அவரது தம்பிகளுக்கும்இருவரும் இடம்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisment

 We will join the for the people benefit environment ... Rajinikanth Interview!

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,

Advertisment

தமிழ்நாட்டின் நலனுக்காக, மேம்பாட்டிற்காகநானும், ரஜினிகாந்தும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைவதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அந்தஅதிசயம் உண்மைதான் என்றார்.

அதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கமலுடன் அரசியலில் இணைவதுகுறித்து கேள்வி எழுப்பினர். அப்போது மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார். அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசியதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளாரேஎன்ற கேள்விக்கு அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பதிலளித்தார்.

Advertisment