Advertisment

"தி.மு.க. மீது கலங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது  நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

publive-image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அதன் ஒருபகுதியாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இல்லம் தேடி கல்வித் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள் இடர்பாடுகள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சொன்னதுதான் முதலமைச்சர் அழகாக வடிவமைத்து கொடுத்தத் திட்டம் தான் 'இல்லம் தேடி கல்வி' திட்டம். மரக்காணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசும்போது கூட இது திராவிட திட்டம் என்று பேசியிருக்கிறார்.

திராவிட திட்டம் என்று சொல்லும் பொழுதே நாங்கள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார். தி.மு.க. கட்சியின் மீது கலங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அவர் எப்படி வலியுறுத்துகிறாரோ, ஊரடங்கு உத்தரவில், எந்த ஒரு தளர்வாக இருந்தாலும் சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்துக் கேட்டு தான் செய்து வருகிறோம்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

pressmeet anbil poyyamozhi minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe