
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். திமுக, அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதைப் போல மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
சில நாட்களாக கோவையில் பிரச்சாரம் செய்த அவர், இன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் அக்கட்சி வேட்பாளர் செந்தில் ஆறுமுகத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது, "தமிழகம் குடியால் சீரழிந்துள்ளது. இத்தனை ஆண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் அதனைச் சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால், அதனை ஆரம்பித்து வைத்த பெருமையே அவர்களைத்தான் சேரும். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்" என்றார்.
Follow Us