Skip to main content

'ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் பேச்சு'-திருமாவளவன் பதில் 

Published on 06/12/2024 | Edited on 07/12/2024
'We will be in the DMK alliance; Aadhav Arjuna will be asked for an explanation'- Thirumavalavan replied

சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 'தமிழ்நாட்டில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது' என பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், ''மணிப்பூரில் என்ன நடந்துட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்க தான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கின்ற அரசு எப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் என்ற ஊருல என்ன நடந்தது என எல்லாருக்குமே தெரியும். சமூகநீதிப் பேசுகின்ற அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே. இவ்வளவு காலங்கள் தாண்டி, இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அது தான். இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார். நடக்கிற பிரச்சனைகளுக்கெல்லாம் நம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கிற பிரச்சனைகள் ஒன்னா ரெண்டா?

பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக இதையெல்லாம் நாம் பார்க்கிறோம், படிக்கிறோம், மற்றவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு என்ன தெரியுமா? ரொம்ப சிம்பிள் தான். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு அமைந்து விட்டாலே போதும். இங்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கு சம்பிரதாயத்துக்காக டிவிட் போடுவது. சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என காட்டிக்கொள்வது. சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று கொண்டு போட்டோ எடுப்பது. எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனா என்ன பண்றது நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அதுபோன்று செய்ய வேண்டியது ஆகிவிட்டது. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.

'We will be in the DMK alliance; Aadhav Arjuna will be asked for an explanation'- Thirumavalavan replied

ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''எத்தனையோ நூல் வெளியீட்டு விழாக்களில் நான் பங்கேற்று இருக்கிறேன். அம்பேத்கரை பற்றி எத்தனையோ மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆயிரக்கணக்கான மேடைகளில் நான் பேசி இருக்கிறேன். எனவே இந்த மேடையில் பங்கேற்க இயலவில்லை அதனால் நான் அம்பேத்கர் கருத்து எதிராக இருக்கிறேன் என்பதை போன்ற  தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது தவறு.

பொதுவெளியில் நடிகர் விஜய் போன்றவர்கள் அம்பேத்கரை பற்றி பேசுவது அம்பேத்கருக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக நான் பார்க்கிறேன். நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அந்த கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைக்கு ஒரு பங்கு உண்டு. நாங்கள் இந்த கூட்டணியில் தொடர்கிறோம். தொடர்வோம் என பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன் அது அர்ஜுனா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார் என்பது உண்மை.  அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம்'' என்றார்.  

சார்ந்த செய்திகள்