வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணிஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்,எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் எனஅதிமுகவினர் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல்தமிழகபாஜகதலைமையோ கூட்டணி முதல்வர் வேட்பாளரைபாஜக மேலிடத்தலைமைதான் அறிவிக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய சிலர்பாஜகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில்,ஹெச்.ராஜா பேசுகையில், "இன்னும் பலர் பாஜகவில் இணைய உள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்கவுள்ளோம்" எனத்தெரிவித்துள்ளார்.