'We want a barricade'-shop closure in Chidambaram

கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கதவணை, தடுப்பணை கட்ட வலியுறுத்தி இன்று (13/08/2024) சிதம்பரம் மற்றும் புவனகிரியில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் கடையடைப்புநடைபெற்றது.

Advertisment

இதுகுறித்து வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் ஏ.வி. அப்துல் ரியாஸ் ஆகியோர் தெரிவிக்கையில், 'கொள்ளிடம் ஆற்றில், கருப்பூர் (கடலூர் மாவட்டம்) - மாதிரி வேலூர் (மயிலாடுதுறை மாவட்டம்) இடையே கதவணை அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கதவணை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Advertisment

அதேபோல், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள, கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் மனிதர்களை ஒருங்கிணைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.

கடையடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. பின்னர் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

Advertisment