Advertisment

"வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை...."- ஜோதிமணி எம்.பி.!

publive-image

ஸொமேட்டோசெயலியில்விகாஷ்என்ற நபர் உணவுஆர்டர்செய்த நிலையில், அவர்ஆர்டர்செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின்வாடிக்கையாளர் சேவைமையத்தைத் தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும்அதைத்தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனதெரிவித்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்றஹாஷ்டேக்க்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல்#Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டானது.

Advertisment

இந்நிலையில்சமூகவலைதளங்களில்எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் செயலுக்கு ஸொமேட்டோ நிறுவனம்வருத்தம் தெரிவித்துள்ளது

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று.

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி உண்டு, அதுவே அந்தந்த மாநிலத்தின் தொப்புள்கொடிஅடையாளம். நமது அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம். நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

jothimani MP congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe