Advertisment

''ஐயப்பன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறோம்...''-அமைச்சர் சேகர்பாபு பேட்டி! 

'' We swear on Iyappan ... '' - Minister Sekarbabu interview!

கோயிலில் பக்தர்களால்செலுத்தப்படும் காணிக்கை நகைகளை உருக்கும் பணிகளில் சிறிய தவறு கூட நிகழாதுஎனதமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

வள்ளலாரின்199 வதுபிறந்தநாள் வரும் 5-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிற நிலையில், சென்னைஏழுகிணறுபகுதியில் வள்ளலார் வசித்தஇல்லத்திற்குச்சென்ற அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்ததோடு வழிபாடும் நடத்தினார்.இந்நிகழ்விற்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ''வடலூரில் 72 ஏக்கரில் வள்ளலாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்''எனத்தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ''கோவில்களில் காணிக்கையாகவழங்கப்பட்டுப்பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகள் உருக்கும் பணி வெளிப்படையாக நடைபெறும். ஆகவே இதில் எந்த தவறும் நிகழாது.இறைவனுக்குதந்த அந்த பொருட்களை இறைவனுக்கேபயன்படுத்துவதுதான்இந்த திட்டம். மீண்டும் மீண்டும்வற்புறுத்திச்சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன். இதில் இம்மியளவு கூட தவறுநடைபெறுவதற்குத்தமிழ்நாடு முதல்வரும், இந்து சமய அறநிலையத் துறையும் அனுமதிக்காது. ஐயப்பன் மீது சாட்சியாக, ஐயப்பன் மீதுசத்தியமிட்டுச்சொல்லுகிறோம் ஒரு சிறு தவறு கூட இந்த நகைகளை உருக்குகின்ற பணியில் நிகழாது நிகழாது'' என்றார்.

Advertisment

TNGovernment Chennai minister sekar babu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe