eps ops

காவிரி பிரச்சினையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்சநீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் இவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதேபோல் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் ஆளுநர் பன்வாரில் புரோகித்தை ராஜ்பவனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment

இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநருடன் பேசினோம், எங்களுடைய பதிலை தெரிவித்தோம். ஆளுநர் எங்களுடைய விளக்கத்தில் திருப்தி அடைந்தார்.

தண்ணீர் பிரச்சனை பற்றியும் நாங்கள் பேசினோம். எங்களுடைய கருத்துக்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தார். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் போராட்டம் தொடர்பாகவும் பேசினோம். உரிய பதிலை தெரிவித்தோம். தமிழக நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தோம் என அவர் கூறினார்.