Skip to main content

“இந்திரா காந்திக்கே கறுப்புக் கொடி காட்டினோம்; இவரெல்லாம் எந்த மூலைக்கு?” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு பேட்டி!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

“We showed the black flag to Indira Gandhi; To which is Rajendrapalaji? ” - KKSSR, Thangam thennarasu


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘தமிழகம் மீட்போம்’ உரைக்கு பதிலடியாக ‘நீங்க என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அனல் கக்க.. விருதுநகர் மாவட்டச் செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும், ‘அரண்மனை நாயே.. அடக்கடா வாயை..’ என்று சினிமாவில் கலைஞர் எழுதிய வசனத்தைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பாலாஜியை எச்சரித்துள்ளனர்.


கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும், விருதுநகரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “மு.க.ஸ்டாலினை தரமற்றுப் பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என்று நினைத்து ராஜேந்திரபாலாஜி ஒருமையில் பேசியிருக்கிறார். ஜெயலலிதா இருக்கும்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயலலிதா காலை மட்டுமல்ல; அவருடைய கார் டயரையும் நக்கிப் பிழைத்தார்கள்.

 

இப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் காலை நக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த மூலை முடுக்கிலும் சென்று ஸ்டாலின் மக்களைச் சந்திப்பார். துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திரபாலாஜி செல்ல முடியுமா? காமராஜருக்கு இறுதி மரியாதை செய்தவர் கலைஞர். சங்கரலிங்கனார் கனவை நனவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. தரம்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அவரால் இந்த மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது.” என்றார்.  


வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு - “எங்க தளபதி பற்றி மிக மோசமான ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். நாங்களும் ஒரு மந்திரிங்கிற அளவுல ஒரு மரியாதையா பேசலாம்னு பார்த்தோம். அவரோ, இன்றைக்கு ரொம்ப கேவலமா பேசக்கூடிய இடத்துக்குப் போய்விட்டார். அவர் உபயோகப்படுத்திய வார்த்தைகளைவிட கீழான வார்த்தைகளில் எங்களாலும் பேசமுடியும். ஆனால், திமுகவிற்கு என்று ஒரு தரம் இருக்கின்ற காரணத்தால், எங்களுடைய உணர்வுகளை நாங்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

 

அவர் நாவை அடக்கிப் பேச வேண்டும். கலைஞர் ஒரு வசனம் எழுதினார். ‘அரண்மனை நாயே.. அடக்குடா வாயை..’ என்று. அதனால்தான், கூறுகிறோம். உங்கள் நாக்குகளை அடக்குங்கள் என்று சொல்கிறோம். மந்திரியாக இருந்துவிட்டால் என்ன? இன்னைக்கு நீங்க மந்திரி. நாளைக்கு ஊருக்குள் வந்து நீங்க நடமாடனும்ல. வாயில வந்ததையெல்லாம் பேசிட்டு போயிடலாம்னா.. எல்லாரும் கேட்டுட்டு இருப்பாங்களா?  

 

“We showed the black flag to Indira Gandhi; To which is Rajendrapalaji? ” - KKSSR, Thangam thennarasu


உங்ககிட்ட இருக்கிற எம்.எல்.ஏ உயிருக்குப் பயந்துகிட்டு இருக்காருன்னு சொல்லுறாங்க. தேவர் சமாதியில போயி விபூதியைத் தட்டிவிட்டோம் என்று.. என்னமோ தேவர்களுக்கெல்லாம் நீங்கதான் அடைக்கலமா இருக்கிறோம், நீங்கதான் பெரிய மனுஷன இருக்கிறோம்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. அதே தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த உங்க கட்சி எம்.எல்.ஏ.க்கே கொலை மிரட்டல் விடறீங்களே. சிவகாசி தொகுதியில் இருக்கக்கூடிய அந்த ஏரியாவுக்கு உங்களால் போகமுடியுமா?  


சிவகாசி தொகுதியில் நின்னு இன்னைக்கு எம்.எல்.ஏ ஆக முடியாம.. வெவ்வேறு தொகுதியில போய் நின்னு.. ஒவ்வொரு ஊரா ஓடிட்டு இருக்கீங்க. எங்களைப் பார்த்துச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதியிருக்கு? தலைவர் ஒவ்வொரு இடத்திலும் நீங்க செஞ்சிருக்கிற ஊழலைப் பட்டியலிட்டு சொன்னாரு. உங்களுக்கு திராணி இருந்தால்.. நீங்க ஒரு சரியான ஆண்மகனாக இருந்தால்.. உங்களிடம் உண்மை இருந்தால்.. நீங்க வழக்கு போட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தைச் சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை.

 

அதை விட்டுவிட்டு, மிகக் கேவலமாக ஒரு மண்ணுன்னு சொல்லக்கூடிய அளவுக்குக்கூட இல்லாமல்.. அண்ணன் சொன்னது போல.. கால் நக்கி பிழைத்துக் கொண்டிருக்கிற நீங்க.. தலைவர் கலைஞருடைய மகனைப் பார்த்துச் சொல்வதற்கு.. அல்லது தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

 
ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க தோழர்கள் உங்கள் நாவை அடக்குவார்கள். இந்த விருதுநகர் மாவட்டத்தில் நீங்க எங்கே வந்தாலும் திமுகவோட எதிர்ப்பைச் சந்தித்துத்தான் ஆகணும். இந்திரா காந்திக்கே கறுப்புக்கொடியைக் காட்டியது திமுக. ராஜேந்திர பாலாஜியெல்லாம் எந்த மூலைக்கு?” என்று கேட்டார். 

 

பதிலுக்குப் பதில் லாவணி பாடிக்கொண்டிருப்பதே அரசியல்!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.