Advertisment

''மக்களை கவரும் அளவிற்கு செயல்பட வேண்டும்''- அமைச்சர் சக்கரபாணி பேச்சு

publive-image

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியில் மேற்கு கிழக்கு ஒன்றிய சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன் தங்கராஜ், உள்படக் கட்சி பொறுப்பாளர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''தமிழகத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டன. 367 வாக்குறுதிகளில் 78 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி பெரிய சாதனையை முதல்வர் படைத்துள்ளார். இரண்டாவது முறையாக தலைவராக பொறுப்பேற்று திமுகவை வழிநடத்தி நடத்தி வருகிறார். அதேபோல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மக்களின் மனதைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe