Advertisment

"இப்படி நடக்கும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம்"- ஜோதிமணி எம்.பி.!

publive-image

Advertisment

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மன்மோகன்சிங் அரசு 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது. இது ஒரு உலக சாதனை என்று ஒபாமா குறிப்பிட்டார். மோடி அரசு 7 ஆண்டுகளில் 23 கோடி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால், இந்தியாவில் வறுமை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும்.

மோடி ஆட்சியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளை விட வறுமை மிகுந்த நாடாக மாறிவிட்டது. இப்படி நடக்கும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம்.

பசித்திருக்கும் மக்களை, குறிப்பாக குழந்தைகளை நினைக்கும் போதே மனது கனக்கிறது. மோடி ஆட்சியை அகற்றுவதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? இன்று உலக வறுமை ஒழிப்புத் தினம், நமக்காக இல்லாவிட்டால் கூட நமது நாட்டிற்காக, இந்த நாட்டின் எதிர்காலமான குழந்தைகளை வறுமையின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக வேணும் காங்கிரஸ் கட்சி மோடி அரசுக்கு எதிரான தர்மயுத்ததை உறுதியோடு முன்னின்று நடத்த வேண்டும். இதுதான் நமது வரலாற்றுக் கடமை. அதை செய்து முடிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

congress jothimani PM NARENDRA MODI Tweets
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe