Advertisment

தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்: விஜயகாந்த்

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவரான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட போது 40க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் மனவேதனையடைந்தேன். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அந்த மாணவிகளை உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அனைத்து மாணவிகளும் மருத்துவ பயிற்சிக்கா சென்றபொழுது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு வீடுதிரும்ப செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். இதில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Forest Fire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe