Advertisment

''தடை வேண்டாம்... கட்டுப்பாடுகள் வேண்டும்''-பாஜக அண்ணாமலை கோரிக்கை!

bjp

கரோனா ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி. நவம்பர் 1 ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடைவிதிக்காமல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

temple Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe