Advertisment

“தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” - செபி பேராய தலைவர்!  

publive-image

Advertisment

செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா, “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

publive-image

Advertisment

1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும்கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe