Advertisment

“கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்”  - அமைச்சர் துரைமுருகன்

“We know how to get water from Karnataka”  - Minister Duraimurugan

Advertisment

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே 3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “ஒரு பெட்ரோல் பங்கை திறப்பதற்கு கூட இவ்வளவு பெரிய விழாவா என நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு அரசாங்கபெட்ரோல் பங்க் மக்களுக்கு தரத்துடன் பெட்ரோலை வழங்குவது இதனுடைய நோக்கம். அப்படியானால் தரத்தோடு வழங்காதவர்கள் உண்டா என்றால் உண்டு. பல பேர்கொஞ்சம் பெட்ரோலை போட்டுவிட்டு மண்ணெண்ணெய் கலந்து விடுவார்கள். அப்படிப்பட்ட பங்குகளும் உண்டு நேர்மை இல்லாத பங்குகளும் உண்டு. பெட்ரோல் போடும்போது மீட்டர் சரியாக உள்ளதா என கண்ணில் பார்த்து போட்டுக்கொள்ள வேண்டும் அது நமது கடமை. தரமானதாகவும், நேர்மையானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தப் பெட்ரோல் பங்க் செயல்பட வேண்டும் என எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு சொன்னாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளாரே’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கேள்விப்பட்டது உண்டா. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணியை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால், இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் திமுக வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும். ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறித்து கேட்டதற்கு, அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்” என பதிலளித்தார்.

duraimurgan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe